நீட் தேர்வில் வென்ற மாணவி: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ நிதிஉதவி வழங்கி வாழ்த்து

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், பேரிட்டிவாக்கம் ஊராட்சியை சேர்ந்த முனிரத்தினம் – சுஜாதா தம்பதியின் மகள் லாவண்யா. இவர் போந்தவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2  படித்தார். இவர் நடந்து முடிந்தநீட் தேர்வில் வெற்றி பெற்று கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரியில் பயில அனுமதி கிடைத்துள்ளது.இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், பேரிட்டிவாக்கம் கிராமத்துக்கு சென்று மாணவிக்கு வாழ்த்து தெரிவித்து ரூ. 25 ஆயிரம் ரூபாய் தனது சொந்த பணத்தில் காசோலையாக வழங்கினார். ஒவ்வொரு வருடமும் படிப்பு முடியும் வரை 5 வருடத்திற்கு வழங்கப்படும் என்று எம்எல்ஏ தெரிவித்தார். ஊராட்சி மன்ற தலைவர் தில்லை குமார் மாணவிக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது ஒன்றிய செயலாளர்கள் டி.கே.சந்திரசேகர், பி.ஜெ.மூர்த்தி, பொன்னுசாமி, திமுக நிர்வாகிகள் ராமமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ், உயர்நீதிமன்ற அரசு வக்கீல் அருண்பிரசாத், அரசு வழக்கறிஞர்கள் வெஸ்லி, தேவேந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் சுதாகர், சித்ரா முனுசாமி, தாமோதரன், குணசேகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  ஊராட்சி துணைத் தலைவர் முனுசாமி, ஊராட்சி செயலாளர் தனசேகர் ஆகியோர் நன்றி கூறினர். …

Related posts

வெயில் தாக்கம் அதிகரிப்பால் உப்பு உற்பத்தி தீவிரம்

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு

மெரினாவில் நாளை விமான சாகச நிகழ்ச்சி: போக்குவரத்து மாற்றம்