நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பருத்தி விதைகள் விற்பனைக்கு தயார்

நீடாமங்கலம் : நீடாமங்கலம் வேளாண் அறிவியல் மையத்தில் பருத்திவிதைகள் விற்பனைக்கு தயாராக உள்ளதாகவும், பண்ணை மேலாளரை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் கருணாகரன் ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தற்போது பருத்தி பயிரிடப்பட்டு இருக்கும் விவசாயிகள் மகசூலை அதிகப்படுத்துவதற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பருத்தி பிளஸ் என்ற நுண்ணூட்டக் கலவையை தெளிப்பதன் மூலம் பருத்தியில் பூ மற்றும் சப்பை உதிர்வதை தவிர்க்க முடியும், காய்கள் முழுமையாக வெடித்து சீரான அறுவடைக்கு வழிவகுக்கும். மேலும் வறட்சியை தாங்கி வளரும் தன்மையை அதிகரித்து 17 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பயன்படுத்தும் முறை: ஒரு ஏக்கருக்கு 2.5 கிலோ பருத்தி பிளஸ் உடன் 200 லிட்டர் தண்ணீரில் தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்த்து கைத்தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை வேளையில் தெளிக்க வேண்டும். பூக்கும் தருணத்தில் ஒரு முறையும் (2.5கிலோ ஏக்கருக்கு) காய் பிடிக்கும் பருவத்தில் மறுமுறையும் (2.5கிலோ/ஏக்கருக்கு) தெளிக்க வேண்டும். இவ்வாறு மேலே கூறிய தொழில்நுட்பத்தை கடைபிடிப்பதன் மூலம் பருத்தியில் நல்ல மகசூல் கிடைக்கும். இந்த பருத்தி பிளஸ் வேளாண்மை அறிவியல் நிலையம் நீடாமங்கலத்தில் விற்பனைக்கு தயாராக உள்ளது. 2.5 கிலோ பருத்தி பிளஸ்ன் விலை ரூ.1,050 மட்டும். மேலும் தகவலுக்கு நக்கீரன் பண்ணை மேலாளரை 9360247160 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது….

Related posts

தேசிய ஊரக சுகாதார திட்டத்தின்கீழ் பணியாற்றும் ஒப்பந்த செவிலியர்களுக்கு மகப்பேறு பலன்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

லாப நோக்கமின்றி 15 வகையான மளிகை பொருட்கள் ரூ.499க்கு விற்பனை: அமைச்சர் அர.சக்கரபாணி துவக்கி வைத்தார்

500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை சாதனை