நீடாமங்கலம் அருகே காரை பெயர்ந்து விழுந்த வகுப்பறை கட்டிடம் இடிப்பு-அதிகாரிகள் நடவடிக்கை

நீடாமங்கலம் : திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகில் உள்ளது முன்னாவல்கோட்டை அரசு மேல் நிலைப்பள்ளி. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுமார் 300க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்குள்ள வகுப்பறை ஒன்று சிமெண்ட் காரைகள் விழுந்து கம்பிகள் வெளியே தெரிந்தது. சில நேரங்களில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தன.மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி வகுப்பறையை விபத்து ஏற்படும் முன் உடனே இடித்து விட்டு புதிய வகுப்பறை கட்ட வேண்டும் என்று மாணவ, மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.இது தொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது. இந்த எதிரொலியால் கடந்த சில நாட்களாக ஆட்களை வைத்து பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு வருகிறது. இதனையறிந்த பள்ளியின் பெற்றோர்கள் செய்தியை படத்துடன் வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.மேலும் பள்ளி கட்டிடம் இடிக்கும் போது தூசிகள் பள்ளிக்குள் செல்வதால் பள்ளி கட்டிடம் இடிக்கும் பணியை துரிதப்படுத்தி விரைவில் முடிக்க வேண்டும் என்றனர்….

Related posts

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தமிழக மீனவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு: இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்

சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் :வைகோ வேண்டுகோள்