நீடாமங்கலத்தில் வழிபறி வழக்கில் 2 வாலிபர்கள் கைது

திருவாரூர், ஜூன் 26: திருவாரூர் மாவட்டத்தில் எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவின் படி மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை, ஆன்லைன் லாட்டரி விற்பனை மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது, மணல் கடத்தல், வழிபறி உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 17ம் தேதி நீடாமங்கலம் சரகத்திற்குட்பட்ட பூவனூர் குடியானத்தெருவில் வசித்து வரும் சரண்யா என்பவர் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த போது தனது கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுன் தங்க சங்கிலியை பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பறித்து சென்றுவிட்டதாக நீடாமங்கலம் போலீஸ் ஸ்டேசனில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து அந்த 2 நபர்களையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சந்தேகமான முறையில் இருந்த மன்னார்குடி மேலமறவாக்காடு இந்திராநகர் பகுதியை சேர்ந்த அரவிந்த்குமார் (25) மற்றும் மன்னார்குடி மேலஒத்தை தெருவை சேர்ந்த ராஜராஜன் (33) ஆகியோரை விசாரணை செய்த போது சரண்யாவிடம் தங்கசங்கிலியினை பறித்து சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் இருவரும் இதற்கு முன்னர் தஞ்சை மாவட்டத்தில் வழிபறி வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடதக்கது. மேலும் மாவட்டத்தில் பொது மக்களின் சொத்துகளை திருடுதல், கைப்பற்றுதல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுப்படுபவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்