நிலச்சரிவில் சிக்கிய 72 பேரின் சடலங்கள் மீட்பு: பிலிப்பைன்ஸ் நாட்டில் சோகம்

மணிலா: பிலிப்பைன்சில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 72 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டின் சமர் மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால்  நேற்றிரவு நிலச்சரிவு ஏற்பட்டது. நல்கேவ் என்ற பகுதியில் வசித்த  ஆயிரக்கணக்கான மக்களை பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டாலும் கூட, மேலும்  நூற்றுக்கணக்கானோர் அப்பகுதியில் சிக்கியுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் சேறும் சகதியுமாக இருப்பதால், அதில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தொடர்கிறது. இருந்தும் அங்கிருந்து 72 பேரின் சடலங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், 50க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுகுறித்து அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், ‘தற்போதைய தகவல்களின்படி 72 பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன. நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 100க்கும் மேற்பட்டோர் இருக்கும். மீதமுள்ளவர்களின் சடலங்கள் தேடப்பட்டு வருகின்றன’ என்றனர்….

Related posts

முதலமைச்சருக்கு பிரிட்டன் எம்.பி. உமா குமரன் நன்றி..!!

ஸ்பெயினில் நடைபெறும் புகழ்பெற்ற காளைச் சண்டைக்கு எதிர்ப்பு: காளைகளை சித்ரவதை செய்வதாக விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம்

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு இதுவரை இல்லாத அளவில் 28 இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் தேர்வு..!!