நியூயார்க் நீதிமன்றத்தில் ஏர் இந்தியா வழக்கு

புதுடெல்லி: இங்கிலாந்தைச் சேர்ந்த கெய்ர்ன் நிறுவனம், கடந்த 2006ல் தன்னுடைய பங்குகளை இந்தியாவில் உள்ள தனது கிளை நிறுவனத்துக்கு மாற்றியதன் மூலம், முதலீட்டு ஆதாயம் அடைந்ததாக கூறி, அந்த நிறுவனத்துக்கு ரூ.9,000 கோடி வரி விதித்தது வருமான வரித்துறை. இதை எதிர்த்து சர்வதேச தீர்ப்பாயத்தில் கெய்ர்ன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதில், கெய்ர்ன் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து இந்திய அரசு மேல் முறையீடு செய்துள்ளது.இதற்கிடையே, சர்வதேச தீர்ப்பாய தீர்ப்பின்படி, இந்திய அரசுக்கு சொந்தமாக வெளிநாடுகளில் உள்ள ஏர் இந்தியா நிறுவனம் உட்பட்ட பல்வேறு சொத்துக்களை ஜப்தி செய்து நிதி திரட்ட அனுமதி கோரி அமெரிக்காவின் கொலம்பியா, நியூயார்க் மாவட்ட நீதிமன்றங்களில் கெய்ர்ன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், சர்வதேச தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு மனு நிலுவையில் உள்ள நிலையில்,  கெய்ர்ன் நிறுவன மனுவை தள்ளுபடி செய்யும்படி நியூயார்க் நீதிமன்றத்தில் ஏர் இந்தியா மனு தாக்கல் செய்துள்ளது….

Related posts

டெல்லியில் அக்.5 வரை 163 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவிப்பு

வாதங்கள் நிறைவடைந்த ஒரு வழக்கில் புதிய சாட்சியங்களை விசாரிக்க சட்டத்தில் இடமில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பதியில் லட்டு கலப்பட விவகாரம்; திண்டுக்கல் ஏஆர் டெய்ரி உரிமையாளர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்