நியாய விலை கடைகளில் உதவியாளர்களை நியமிக்க வேண்டும்: கூட்டுறவு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை

 

ராஜபாளையம், ஜூலை 29: நியாய விலை கடைகளில் உதவியாளர்களை நியமனம் செய்திட வேண்டும் என,விருதுநகர் மாவட்ட கூட்டுறவு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ராஜபாளையம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நேதாஜி கலையரங்கத்தில் சிஐடியு விருதுநகர் மாவட்ட கூட்டுறவு ஊழியர்கள் சங்கத்தின் பத்தாவது மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவர் முனியாண்டி தலைமையில் நடைபெற்றது. மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில், நியாய விலை கடைகளில் உதவியாளர்களை நியமனம் செய்திட வேண்டும், எடை குறைவு இல்லாமல் பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் பொருட்களை பாக்கெட் முறையில் வழங்கிட வேண்டும், பிஓஎஸ் இயந்திரங்களுக்கு தடையில்லா நெட்வொர்க் சர்வர் ஏற்பாடு செய்திட வேண்டும், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களுக்கு ஓய்வு கால பென்ஷன் உறுதிப்படுத்த வேண்டும்.

கூட்டுறவு சங்க ஊழியர்கள் மீது நிர்ப்பந்தம் செய்வது, மரியாதை குறைவாக நடத்துவது போன்ற செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் கூட்டுறவு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள், சிஐடியு சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது