நாளை 5-வது மெகா முகாம் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு குலுக்கலில் கலர் டி.வி. பரிசு-கலெக்டர் அறிவிப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆட்சியர் அமர் குஷ்வாஹா கூறியதாவது:-திருப்பத்தூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 9.45 லட்சம் ஆகும். இதில், 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 4.45 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி மீது இன்னும் சிலருக்கு பயம் இருப்பதால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியவில்லை.திருப்பத்தூர் மாவட்டத்தில் 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவமனையில் தினமும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்துக்கு தேவையான தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. மாநில சுகாதாரத்துறை மூலம் கடந்த மாதம் 12-ம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.முதல் தடுப்பூசி முகாமில் 40 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டது. அப்போது பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினர். அதன்பிறகு நடைபெற்ற 2, 3 மற்றும் 4-வது மெகா தடுப்பூசி முகாமில் எதிர்பார்த்த அளவுக்கு பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை. எனவே, நாளை நடைபெறும் 5-வது மெகா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களில் 3 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு தலா ஒரு 32 இன்ச் கலர் டி.வி. பரிசாக வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். அப்போது, திருப்பத்தூர் எஸ்.பி. பாலகிருஷ்ணன் உடனிருந்தார்….

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்