நார்த்தங்குடி கிராமத்தில் நானோ யூரியா இலைவழி தெளிப்பு செயல் விளக்கம்-ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு

வலங்கைமான் : வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் ஆலோசனையின்பேரில் வலங்கைமான் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டம் அட்மா திட்டத்தின்கீழ் 22.12.2022 நார்த்தங்குடி கிராமத்தில் நானோ யூரியா இலைவழி தெளிப்பு தொழில்நுட்ப செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.வட்டார தொழில்நுட்ப மேலாளர் விக்னேஷ் பேசுகையில், பெரும்பாலும் விவசாயிகள் பயிர்கள் நல்ல விளைச்சல் தர உரங்களையே பயன்படுத்துகின்றனர். அதில் குறிப்பாக யூரியாவின் தேவை ஆண்டுக்குஆண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது.யூரியா விளைச்சல் தரும் என்றாலும், அது நிலத்தை கெடுக்கும் என்பது மறுக்கப்படாத உண்மை. அதற்கு நல்ல உபயோகமாகதான் இந்தியாவில் நானோ யூரியா கண்டுபிடிக்கப்பட்டு தற்போது உபயோகத்திற்கு வந்துள்ளது.சாதாரண யூரியாவை மண்ணில் அடி உரமாகவோ மேல் உரமாகவோ இடும்போது 35 சதவீத சத்து தான் பயிருக்கு பயன்படுகிறது. மீதம் நீரில் கரைந்து ஆவியாகி வளிமண்டலத்தில் கலந்து வீணாகிறது. இதனால் விவசாயிகள் அதிக மகசூல் பெறுவதற்காக அளவுக்கு அதிகமான யூரியாவை வயல்களில் இடுகின்றனர்.இதனால் மண்ணின் வளம் குறையும். அதற்கு மாற்றாக நானோ யூரியாவை பயன்படுத்துவதினால் 6 முதல் 20 சதவீத விளைச்சல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஒரு பாட்டிலில் 500 மில்லி இருக்கும் இது ஒரு மூட்டை யூரியாவிற்கு சமம். 500 மில்லி நானோ யூரியாவை 125 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கர் நிலத்தில் தெளிக்கலாம். நானோ யூரியாவை இலைவழி உரமாக தெளிப்பதனால் பயிர் இலைகள் ஒரு மணி நேரத்தில் யூரியாவை எடுத்துக் கொள்ளும்.இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவது வெகுவாக குறைக்கப்படுகிறது என கூறினார். தொடர்ந்து நானோ யூரியா இலைவழி உரம் தெளிப்பு செயல்விளக்கம் விவசாயிகள் முன்னிலையில் செய்து காண்பிக்கப்பட்டது. அப்போது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட அலுவலர் சிவலிங்கம், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பிரியங்கா மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்….

Related posts

தொடர்ந்து 2வது நாளாக தாமதமாக புறப்பட்ட சிங்கப்பூர் விமானம்: பயணிகள் கடும் அவதி

மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

கூட்டாட்சி முறையை சிதைத்துவிடும் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது: ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு