நாரணாபுரம் பள்ளிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்: மக்கள் கோரிக்கை

 

சிவகாசி, செப்.23: சிவகாசி அருகே நாரணாபுரம் பள்ளிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிவகாசி அருகே நாரணாபுரம் முனியசாமி கோயிலில் இருந்து நாரணாபுரம் அரசு பள்ளி செல்லும் வகையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் கொண்ட தார்ச்சாலை உள்ளது. இந்த தார்சாலை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. தற்போது சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

சாலையின் பெரும்பாலான பகுதிகள் முற்றிலும் சேதமடைந்து ரோடு இல்லாத அளவிற்கு மோசமானதாக உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் இந்த சாலையில் தண்ணீர் தேங்கி காணப்படும். இதனால் முற்றிலும் போக்குவரத்து தடை ஏற்படும்.இதனால் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த இந்த சாலையை மழைக்காலத்துக்குள் சீரமைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி