நாய்களிடமிருந்து மயிலை காப்பாற்றிய வாலிபர்: பொதுமக்கள் பாராட்டு

ஆவடி: நாய்கள் விரட்டி சென்ற மயிலை மீட்டு வாலிபர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ஆவடி அடுத்த பட்டாபிராம் புதிய இந்திரா நகரைச் சேர்ந்தவர் அபினேஷ்(24). தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். பட்டாபிராம் எம்ஜிஆர் நகர் அருகே வந்தபோது நாய்கள் மயில் ஒன்றை துரத்தி செல்வதை பார்த்துள்ளார். இதையடுத்து பைக்கை நிறுத்திவிட்டு நாய்களிடம் இருந்து மயிலை மீட்டார். நாய்கள் கடித்ததில் மயிலுக்கு லேசான காயங்கள் இருந்தன. பின்னர் மீட்கப்பட்ட மயிலை பட்டாபிராம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார், திருவள்ளூர் மாவட்ட வனக்காப்பாளர் விக்னேஷிடம் மயிலை ஒப்படைத்தனர். மயிலை பெற்றுக்கொண்ட வனக்காளப்பாளர், காட்டில் விடுவதாக தெரிவித்துள்ளார். தேசிய பறவையான மயிலை நாய்களிடம் இருந்து காப்பாற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்த வாலிபரை பொதுமக்களும், போலீசாரும் பாராட்டினர்….

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்