நாமக்கல்லில் பரவலாக மழை

 

நாமக்கல், ஜூன் 3: நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் குமாரபாளையத்தில் 12 மிமீ பதிவானது. நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்துள்ளது. நாமக்கல் நகரில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. மாவட்டத்தில் இந்த வாரம் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து இரவில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. நேற்று காலை 6 மணி வரை, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் குமாரபாளையம்- 12, மங்களபுரம்- 6, நாமக்கல்- 2, பரமத்தி வேலூர்- 1, ராசிபுரம்- 6, சேந்தமங்கலம்- 14, திருச்செங்கோடு- 4, கொல்லிமலை 3 மில்லிமீட்டர்.

தொடர்ந்து மழை பெய்தால், கிணறுகள், விவசாய நிலங்கள், போர்வெல்களில் நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். தற்போது பெய்து வரும் மழைக்கு மரவள்ளி மற்றும் நிலக்கடலை சாகுபடி பரப்பு அதிகரிக்கும் நிலை உள்ளது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை