நாமக்கலுக்கு சரக்குரயிலில் 1250 டன் அரிசி அனுப்பிவைக்கப்பட்டது

தஞ்சாவூர் ஜூலை 4: தஞ்சையில் இருந்து நாமக்கலுக்கு சரக்கு ரயிலில் 1250 டன் அரிசி நேற்று அனுப்பிவைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதுதவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1,250 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் சரக்கு ரயிலில் 21 வேகன்களில் 1,250 டன் புழுங்கல் அரிசி ஏற்றப்பட்டு நாமக்கலுக்கு பொது வினியோக திட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Related posts

சிவாய நம சிவாய நம விண்ணை பிளக்க நடராஜர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

தமிழகத்தில் 40 ஆயிரம் காவலர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும்

தம்பதியின் உறவினர்கள் 2 பேர் கைது