நாட்டிலேயே முதல்முறையாக சென்னை காவல் துறைக்கென நடமாடும் ஆளில்லா விமான காவல் பிரிவை உருவாக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

சென்னை : நாட்டிலேயே முதல்முறையாக சென்னை காவல் துறைக்கென நடமாடும் ஆளில்லா விமான காவல் பிரிவை உருவாக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னையில் கூட்டமான இடங்களையும் நீண்ட தூர சாலைகளையும் கண்காணிப்பதற்கான ரூ. 3.60 கோடி செலவில் நடமாடும் ஆளில்லா விமான காவல் பிரிவு அமைக்கப்படும் என கடந்த பேரவைக் கூட்டத் தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி பொதுமக்களுக்கு உடனடியாக உதவுவதற்கு ஏதுவாக எச்.டி. கேமராக்கள் மற்றும் இரவு நேரமும் காட்சிகளை பதவி செய்யும் வகையிலான கேமராக்களுடன் கூடிய விமானங்கள் உட்பட 3 விதமான 9 ஆளில்லா விமானங்களை கையகப்படுத்த சென்னை காவல்துறை தரப்பில் பரிந்துரைக்கப்பட்டது. அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டுப்பாட்டு அறைஅலுவலகம் ஒன்றை அமைக்கவும் அறிவுறுத்தி இருந்தனர். தமிழ்நாடு காவல்துறை தலைவர் இதனை அங்கீகரித்து அரசுக்கு பரிந்துரை செய்து இருந்தார். அதன் அடிப்படையில் தற்போது சென்னை காவல்துறைக்கென நடமாடும் ஆளில்லா விமான காவல் பிரிவை உருவாக்க நிதி ஒதுக்கீடு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் உள்ள ஆளில்லா விமான பிரிவுத் துறையுடன் இணைந்து செயல்படுமாறு டிஜிபிவிற்கு உள்துறை செயலாளர் பிரபாகரன் அறிவுறுத்தி உள்ளார்.   …

Related posts

₹1.5 கோடி சொத்து வரி பாக்கி தி.நகரில் 43 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

சென்னையிலிருந்து தாய்லாந்துக்கு கடத்த முயன்ற 1.11 கோடி ஹவாலா பணம் பறிமுதல்:  2 கடத்தல் குருவிகள் அதிரடி கைது  தங்கக் கட்டிகளாக மாற்றி வர முயற்சி

என்.எஸ்.சி போஸ் சாலை பகுதியில் இருந்த பிள்ளையார் கோயில் மீண்டும் கட்டப்படும்: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்