நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 12.41% ஆனது

புதுடெல்லி: கடந்த ஆகஸ்டில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கடந்த ஜூலையை விட தொடர்ந்து 3வது மாதமாக 12.41 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கான நாட்டின் மொத்த விலை பணவீக்கம் விவரங்களை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்டில் மொத்த விலை பணவீக்கம் 12.41 சதவீதமாக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய மாதத்தில் இது 13.93 சதவீதமாக இருந்தது. 2021ம் ஆண்டு, ஆகஸ்டில் இது 11.64 சதவீதமாக இருந்தது. கடந்த ஆகஸ்ட்டின் மொத்த விலை பணவீக்கம் உயர்வுக்கு, உணவுப் பொருட்கள், கச்சா எண்ணெய், எரிவாயு, ரசாயனம் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வே முக்கிய காரணமாக உள்ளது. ஆகஸ்டில் மொத்த விலை பணவீக்கம் குறைந்தாலும் கூட, தொடர்ந்து 17 மாதங்களாக மொத்த விலை பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது. கடந்த மே மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 15.88 சதவீதம் ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. அடுத்த சில மாதங்களுக்கு பணவீக்கம் உயர்வாகவே இருக்கும் என கருதப்படுவதால், பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என தெரிகிறது….

Related posts

ஜூலை 07: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து சவரன் ரூ.54,560-க்கு விற்பனை