நாடு முழுவதும் 9 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு சாதனை!: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பெருமிதம்..!!

டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 9 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பெருமிதம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா கொல்லுயிரியின் வீரியம் வேகமெடுத்து வருகிறது. இதில் குறிப்பாக மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், தமிழகம், டெல்லி, மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய எட்டு மாநிலங்களில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது.  இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் 2ம் அலை அசுர வேகத்தில் வீசி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடுகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், புகாரை மறுத்துள்ள மத்திய அரசு, கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருப்பதாக கூறுவது தவறான தகவல்; போதுமான அளவு தடுப்பூசி டோஸ்கள் கைவசம் உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் இதுவரை 9 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு  சாதனை படைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. உலகின் மிகப் பெரிய தடுப்பூசித் திட்டமான இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கி வைத்தார். 3 மாதம் கூட நிறைவுபெறாத சூழலில் 9 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி பணிகளை மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இம்மாதம் முழுவதும் விடுமுறை தினங்கள் உட்பட அனைத்து நாட்களிலும் அரசு மற்றும் தனியார் மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது. …

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்