நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி துவங்கியது: மக்களிடம் ஆர்வம் இல்லாததால் மந்தம்

புதுடெல்லி: நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இந்தியாவில் முதல் கட்டமாக, கடந்தாண்டு ஜனவரியில் சுகாதார, முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. பின்னர், படிப்படியாக 60 வயது, 45 வயது, பிறகு 18 வயதுக்கு மேற்பட்டோர் என இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. சமீபத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டமும் தொடங்கியது.இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் திட்டம் நேற்று தொடங்கியது. ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி போட்டு, 9 மாதம் கடந்தவர்களுக்கு இது செலுத்தப்படுகிறது. ஆனால், இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவிஷீல்டு, கோவாக்சின்  தடுப்பூசிகள் இதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் ஒரு டோஸ் விலை ரூ.225. அதோடு, ஊசி போடுவதற்கான சேவை கட்டணமாக ரூ.150 வரையில் மருத்துவமனைகள் வசூலிக்கலாம் என ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.  இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய சுகாதார அமைச்சகம் செய்துள்ளது. ஏற்கனவே 2 தடுப்பூசிகளுக்கு கோவின் செயலியில் பதிவு செய்திருப்பதால், பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு தனிப்பட்ட முறையில் பதிவு செய்ய தேவையில்லை. இதற்காக ஆன்லைன் முன்பதிவு அல்லது தனியார் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த கட்டணம் செலுத்தி போட வேண்டும் என்பதால், மக்கள் இதை செலுத்திக் கொள்வதில் நேற்று அதிகளவில் ஆர்வம் காட்டவில்லை.பலி எண்ணிக்கை 29 ஆக குறைவுஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்ட 24 மணி நேரத்துக்கான கொரோனா பாதிப்பு, பலி குறித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:* நேற்று புதிதாக 1,054 பேருக்கு தொற்று பாதித்ததை தொடர்ந்து, மொத்த பாதிப்பு 4,30,35,271 ஆக உள்ளது.* தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 11,132 ஆக குறைந்துள்ளது.* நாடு முழுவதும் இதுவரை 185.70 கோடிக்கு  மேற்பட்ட தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.* நேற்று ஒரே நாளில் 29 பேர் தொற்றுக்கு பலியானதால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,21,685 ஆக உயர்ந்தது….

Related posts

சில்லி பாயின்ட்…

15 ஆண்டுகளுக்கு பிறகு நியூசி.க்கு எதிராக இலங்கை வரலாற்று வெற்றி: 2-0 என ஒயிட்வாஷ் செய்து அசத்தல்

சவாலை எதிர் கொள்வோம்…ஓவன் கோயல் உறுதி