நாடு முழுவதும் அஞ்சல் துறை மூலம் கடலை மிட்டாய் விநியோகம்: தபால் நிலையத்தில் முன்பதிவு செய்து அனைவரும் வாங்க ஏற்பாடு

தூத்துக்குடி: கோவில்பட்டி கடலை மிட்டாயை இந்தியா முழுவதும் எந்த இடத்தில் இருந்தும் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ள அஞ்சல்துறை மூலம்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அத சுற்றுவட்டார பகுதிகள் வானம் பார்த்த பூமியாகும். இங்கு கரிசல்மண்ணில் விளைவிக்கப்படும் நிலக்கடலைகளுக்கு எப்போதுமே தனிச்சுவை உண்டு. இங்கு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு கடலைமிட்டாய்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏற்கெனவே பழனி பஞ்சாமிர்தம் அஞ்சலகங்கள் வழியாக அறநிலையத்துறை மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று புவிசார் குறியீடு பெற்ற உணவு பண்டமான கடலைமிட்டாயை விற்பனை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் அஞ்சலகம் மூலம் ஆர்டர்கள் பெறப்பட்டு, இன்று முதல் கடலைமிட்டாய்களை அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. ஒரு பெட்டியில் தலா 200கிராம் கொண்ட 5 பாக்கெட்டுகள் என ஒரு கிலோ கடலைமிட்டாய் இருக்கும். இதற்கு 390 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.      …

Related posts

கடலூர் – புதுச்சேரி எல்லை சோதனைச் சாவடியில் போலீசார் சோதனை

கோவை ஈஷா யோகா மைதானத்தில் போலீசார் நடத்திய விசாரணை நிறைவு

இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பள்ளி வேன் மோதியதில் 4 வயது குழந்தை உயிரிழப்பு