நாடு தழுவிய அளவில் இன்றும், நாளையும் திட்டமிட்டபடி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: இந்திய வங்கி ஊழியர் சங்கம் அறிவிப்பு..!

டெல்லி: நாடு தழுவிய அளவில் இன்றும், நாளையும் திட்டமிட்டபடி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து, கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதித்துறை பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பின் அடிப்படையில், 2 வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கான முதல்கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி, 2 பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது தொடர்பான வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021, நடப்பு நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கிடையில், பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய அளவில் 2 நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வங்கிகள் தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வேலை நிறுத்தப்போரட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 90 ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான வங்கி கிளைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வங்கி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்….

Related posts

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி கவலை தருகிறது: மத்தியக்குழு பரபரப்பு அறிக்கை