நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி

நாசரேத், நவ. 10: நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் மனிதநேய மேம்பாட்டு மன்றம் சார்பில் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்தார். உதவி குரு பொன்செல்வின் அசோக்குமார் ஆரம்ப ஜெபம் செய்தார். கல்லூரி இயக்குநர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். ஊழியர் தியோடர் சாமுவேல் வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியில் நோயால் பாதிக்கப்பட்ட 20 பேருக்கு புத்தாடை மற்றும் ரொக்கப்பணம் ₹1000 வழங்கப்பட்டன. ஆசிரியை சுவீட்லின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி தாளாளர் செல்வின் நன்றி கூறினார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை