நாகூர் தர்கா கந்தூரி விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம்

 

நாகப்பட்டினம்,டிச.12: நாகூர் தர்கா 467வது ஆண்டு கந்தூரி விழா ஏற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நாகூரில் நடந்தது. நாகூர் தர்கா 467வது ஆண்டு கந்தூரி விழா வரும் 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 23ம் தேதி சந்தனகூடு ஊர்வலமும், 24ம்தேதி அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இவ்வாறு 10 நாட்கள் நடைபெறும் விழா முன்னேற்பாடுகள் குறித்து நாகூரில் எம்எல்ஏ முகம்மதுஷா நவாஸ் தலைமையில் நடந்தது. கந்தூரி ஊர்வல பாதை செப்பனிடுதல், போக்குவரத்து சரி செய்தல் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசால் தரக்கூடிய சந்தன கட்டைகள் விரைவில் வழங்க கோரிக்கை விடப்பட்டது. நாகப்பட்டினம் நகராட்சி தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் திருமால்செல்வம், நாகூர் தர்கா மானேஜிங் டிரஸ்டி காஜிஉசேன்சாஹிப், பரம்பரை அறங்காவலர்கள் நஜ்மூதீன் சாஹிப், முகம்மது பாக்கர் சாஹிப், ஹாஜா முய்னுதீன் சாஹிப், பாவா சாஹிப், தர்கா பிரசிடன்ட் கலீபா சாஹிப், மானேஜர் அன்பழகன் மற்றும் நாகூர் தர்கா சாஹிப்மார்கள் கலந்து கொண்டனர்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்