நாகாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்

தர்மபுரி, நவ.2: தர்மபுரி அருகே அதியமான்கோட்டையில் வீரகாரன் கோயில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாகாத்தம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, கடந்த 31ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, பூமிதேவி பூஜை, கும்ப அலங்காரம், இரவு 7 மணிக்கு மூலவருக்கு யந்திரம் மருந்து சாத்துதலும் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று(1ம் தேதி) காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜையும், காலை 10 மணிக்கு புனித கலசங்கள் புறப்பட்டு, நாகாத்தம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை