நாகர்கோவிலில் மதுக்கடைகளை மூட கோரி பெண்கள் இணைப்புக் குழு ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜூன் 29: தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். போதை பொருட்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும். கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள் விற்பனைக்கு துணை போகும் அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இணைப்பு குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லிட்வீன் தலைமை வகித்தார். இணைப்பு குழு செயலாளர் உஷா, தமிழ்நாடு தெற்கு எழுத்தாளர் இயக்க பொறுப்பாளர் அழகு தமிழ், வழக்கறிஞர் திருத்தமிழ் தேவனார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை