நாகமலை அருகே பிரசித்திபெற்ற தட்டனூர் பொன் முனியாண்டி கோயிலில் வருடாபிஷேக விழா

திருப்பரங்குன்றம், ஜூன் 7: நாகமலை அருகே உள்ள பிரசித்தி பெற்ற மகா பொன் முனியாண்டி கோயிலில் வருடாபிசேகம் நடைபெற்றது. நாகமலை புதுக்கோட்டை அருகில் தட்டனூர் கிராமத்தில் ஸ்ரீ மகா பொன் முனியாண்டி கோயில் உள்ளது. இந்த கோயிலில் வேறெங்கும் காண முடியாத ஆண் முனி மற்றும் பெண் முனி ஆகிய இரண்டு சாமிகளும் ஒரே இடத்தில் ஒரே கோயிலில் அமைந்துள்ளன. இந்த கோயிலில் விளாச்சேரி, வடிவேல்கரை, தட்டனூர், கீழக்குயில்குடி ஆகிய கிராமத்தினர் சார்பாக நேற்று வருடாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை