நாகப்பட்டினத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் திடீர் கோளாறு

 

நாகப்பட்டினம், ஜூன் 5: நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் திடீர் கோளாறால் இரண்டு மின்னணு இயந்திரம் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாகப்பட்டினம் சட்டசபை தொகுதியில் உள்ள நாகூர், திருப்புகலூர் வாக்குப் பதிவு மையத்தில் பயன்படுத்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபட்டபோது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென இயந்திரம் பழுது அடைந்தது. இதனால் அந்த இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. விவிபேட் இயந்திரத்தில் பவதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்