நாகப்பட்டினத்தில் நீட் தேர்வு 530 மாணவர்கள் எழுதினர்

நாகப்பட்டினம், மே 6: நாகப்பட்டினத்தில் நேற்று நடந்த நீட் தேர்வில் 530 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 54 பேர் தேர்வெழுத வரவில்லை. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று 3 மையங்களில் நீட் தேர்வு நடந்தது. மதியம் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5.20 மணிக்கு நிறைவு பெற்றது.

நாகப்பட்டினம் இசிஎஸ்பிள்ளை கல்லூரியில் 720 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 694 மாணவர்கள் வருகை தந்தனர். 26 பேர் தேர்வு எழுத வரவில்லை. நாகப்பட்டினம் சின்மயா வித்யாலயா பள்ளியில் 456 பேர் தேர்வு எழுத விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 442 மாணவர்கள் வருகை தந்திருந்தனர். 14 பேர் தேர்வு எழுத வரவில்லை.

நாகப்பட்டினம் அமிர்தா வித்யாலயா பள்ளியில் 408 பேர் தேர்வு எழுத விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 394 மாணவர்கள் வருகை தந்திருந்தனர். 14 பேர் தேர்வு எழுத வரவில்லை. ஆக மொத்தம் 3 மையங்களில் தேர்வு எழுத ஆயிரத்து 584 பேர் விண்ணப்பம் செய்திருந்ததில் ஆயிரத்து 530 மாணவர்கள் வருகை தந்திருந்தனர். 54 பேர் வருகை தரவில்லை.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்