நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

நாகப்பட்டினம்,ஜூன்18: காவிரியின் குறுக்கே அணைகட்டும் கர்நாடக அரசின் முயற்சிறை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர்கள் வடிவேல், சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். மேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும். காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணைகட்டும் முயற்சியை ஒன்றிய அரசு தலையிட்டு தடுக்க வேண்டும். விவசாய கடன்கள் அனைத்தையும் மோடி அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்