நவ.24ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

 

திருப்பூர், நவ.19: திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 24ம் தேதி காலை 10.30 மணிக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடக்கிறது. கூட்டத்துக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகிக்கிறார். அனைத்து துறை அலுவலர்கள், விவசாயிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் முதலாவதாக விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் கலெக்டரிடம் வழங்குவார்கள்.

அதன்பின், பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்துக்கு ஒருவர் வீதம் தங்களது கோரிக்கைகளை தொகுத்து கலெக்டரிடம் நேரடியாக தெரிவிக்கலாம்.  விவசாயிகள், நுண்ணீர் பாசனம் அமைக்க வசதியாக தோட்டக்கலை, வேளாண்மை அலுவலர், வேளாண் பொறியியல் துறை அலுவலர்களைக் கொண்டு வேளாண் உதவி மையம் அமைக்கப்படுகிறது. விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைப்பு தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம். இந்த தகவலை திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை