நவபாஷாண தீர்த்த பகுதியில் படித்துறை வேண்டும் தேவிப்பட்டிணம் பக்தர்கள் வேண்டுகோள்

ராமநாதபுரம்: தேவிப்பட்டிணம் நவபாஷாண நவகிரக தீர்த்த பகுதியில் படித்துறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது தேவிப்பட்டிணம். இங்கு அலையின்றி அமைதியான நிலையில் காணப்படும் கடலில் உப்பு பாறைகளால் ஆன நவகிரகங்களின் 9 விக்கிரகங்கள் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. ராமபிரான் பூஜித்ததாக ராமாயணம் புராணத்துடன் தொடர்புள்ள தலம் என்பதால் முன்னோர்களுக்கு பல்வேறு தோஷங்கள் உள்ளவர்கள், முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தல், திருமணம் தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட முக்கிய சடங்குகளை செய்வதற்காக இங்கு நாள்தோறும் உள்மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள், கேரளா, ஆந்திரா, தெலுங்கான, பாண்டிச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்கள், வட மாநிலத்தவர் என பல்வேறு இடங்களிலிருந்தும் பொதுமக்கள் வருகின்றனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்