நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சாலை அமைக்க ரூ.8 லட்சம் நிதி

 

திருப்பூர், ஜூலை 26: திருப்பூர் 24வது வார்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சாலை அமைக்க ரூ.8 லட்சம் நிதியை பொதுமக்கள் சார்பில், மேயரிடம் கவுன்சிலர் நாகராஜ் வழங்கினார். திருப்பூர் மாநகராட்சி 24வது வார்டுக்கு உட்பட்ட ஈ.பி. காலனி 2வது வீதியில் 50 அடி ரோட்டில் தார் சாலை அமைக்க மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் அங்கு 5 மீட்டர் அளவிற்கு ரோடு சிறியதாக இருப்பதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக 50 அடி ரோடு குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தினர்.

இதில் சாலையை மேலும் 4 மீட்டர் அகலத்திற்கு அகலப்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும், சாலை அமைக்கும் பணிக்கு செலவாகும் மொத்த தொகையான ரூ.24 லட்சத்தில், ஒரு பங்கான ரூ.8 லட்சத்தை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மாநகராட்சிக்கு வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ. 8 லட்சத்திற்கான காசோலையை மாநகராட்சி அலுவலகத்தில் குடியிருப்போர் நலச்சங்கப் பொதுமக்கள் சார்பில், 24வது வார்டு கவுன்சிலர் நாகராஜ், மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கினார். அப்பொழுது முதலாவது மண்டலத் தலைவர் உமா மகேஸ்வரி மற்றும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை