நன்னிலம் பகுதியில் புதர் மண்டிக்கிடக்கும் தாசில்தார் குடியிருப்பு கட்டிடம்-சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

நன்னிலம் : நன்னிலம் பகுதியில் புதர் மண்டிக்கிடக்கும் தாசில்தார் குடியிருப்பு கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றுபவர்கள் உள்ளூரிலேயே குடியிருக்கும் வகையில், அரசு அவர்களுக்கு குடியிருப்பு கட்டிடம் கட்டி கொடுத்துள்ளது. இந்த நிலையில், கடந்த பல வருடங்களாக தாசில்தார் யாரும் குடியிருப்பை பயன்படுத்தாத காரணத்தினால் அந்த கட்டிடம் புதர் மண்டி பாழடைந்துள்ளது.மேலும், அந்த பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், ஆகியவை உள்ளன.அந்த கட்டிடத்தில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உள்ள நிலையில் அப்பகுதி வழியேதான் பள்ளி மற்றும் கல்லூரிக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.உடனடியாக தாசில்தார் குடியிருப்பு கட்டிடத்தை சீரமைத்து அந்த கட்டிடத்தில் தாசில்தார் குடியிருக்கும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து. நடை முறைப்படுத்த வேண்டும் என நன்னிலம் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்

கோவை, நெல்லை மேயர்கள் திடீர் ராஜினாமா