நத்தவெளி இணைப்பு சாலையில் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

 

கடலூர், அக். 9: கடலூர் நத்தவெளி இணைப்பு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நத்தவெளி இணைப்பு சாலையில் குடிமைபொருள், வழங்கல் குற்ற புலனாய்வு துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று காலை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி ஒன்று திடீரென எரிய தொடங்கியது.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கடலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். லாரி தானாக தீப்பிடித்து எரிந்ததா அல்லது அருகில் உள்ள குப்பையில் இருந்து தீ பட்டு எரிந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி