நத்தம் விஸ்வநாதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?.. தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு உள்ளதாக சத்யபிரதா சாகு தகவல்

சென்னை: பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் மீதான புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ? என்பது குறித்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார். காட்டுவேலாம்பட்டியில் நடந்த கூட்டத்தில் ஆரத்தி எடுத்தவர்களுக்கு தட்டில் பணம் போட்டதாக வீடியோ ஆதாரத்துடன் போலீசில் புகார் தெரிவித்திருந்தார். தேர்தல் அதிகாரி புகாரின் பேரில் நத்தம் விஸ்வநாதன் மீது கிழ்நத்தம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…