நத்தம், வடமதுரை கோயில்களில் ஐப்பசி மாத பிரதோஷ வழிபாடு

நத்தம், அக். 28: நத்தம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி சமேத கைலாசநாதர் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்தி சிலைக்கு பால், இளநீர், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள், தேன் உள்பட 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து மூலவர் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

*வடமதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்தி சிலைக்கு 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தினர். முன்னதாக சிவபெருமானுக்கும், மீனாட்சி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பொங்கல், புளியோதரை, பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆன்மீக அன்பர்கள் செய்திருந்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை