நத்தம் பஸ்ஸ்டாண்டில் நிறுத்து தளங்கள் முறையாக இல்லை

நத்தம் :  நத்தம்  பஸ் நிலையத்தில் இருந்து தினசரி மதுரை, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர்,  கோயம்புத்தூர், திருச்செந்தூர், காரைக்குடி, பழநி போன்ற பல்வேறு  இடங்களுக்கு பஸ்களும் மற்றும் அருகிலுள்ள ஊர்களுக்கு செல்லும் நகர பஸ்களும்  இயக்கப்பட்டு வருகின்றன. பஸ்நிலையத்தின் விரிவாக்க பகுதியான  தென்புறத்தில் நத்தத்தில் இருந்து மதுரை செல்லும் பஸ்கள் நிறுத்தி எடுத்து  செல்லுமாறு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நத்தம் பேரூராட்சி, காவல்துறை  சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி நத்தத்தில் இருந்து மதுரை செல்லும்  பஸ்களை அங்கு நிறுத்தி, எடுத்து செல்கின்றனர். இந்த இடம் சாய்வாக இல்லாமல்  நேருக்குநேராக உள்ளதால், பஸ்களை எடுத்து செல்ல மிகுந்த சிரமப்படுவதாக  ஓட்டுனர்கள் புலம்பி வருகின்றனர். இதுகுறித்து பஸ் ஓட்டுனர்  பழனிச்சாமி கூறுகையில், ‘நத்தம் பஸ்நிலையத்தில் விரிவாக்க பகுதி நிறுத்து  தளங்கள் முறையாக சாய்வாக பகுப்பு செய்து கட்டாமல் உள்ளது. இப்போது  இருக்கும் தளங்கள் நேருக்கு நேராக உள்ளதால் பஸ்களை வந்து நிறுத்திய பின்  அவற்றை எடுத்து கிளம்பும்போது, பின்புறமாக ஏதேனும் வாகனம்  நிறுத்தப்பட்டிருந்தால் அவற்றை எடுத்தால்தான் செல்ல முடியும். எனவே பஸ்கள்  நிறுத்து தளங்களை முறையாக சாய்வாக அமைக்க வேண்டும். அப்போதுதான குறைவான  இடமாக இருந்தாலும் பஸ்களை நிறுத்தவும், அவற்றை எடுத்து செல்லவும் ஏதுவாக  இருக்கும் என்றார்….

Related posts

ஈரோட்டில் இன்று அதிகாலை கார் கவிழ்ந்து 2 இளம்பெண்கள் பலி

பல்வேறு வேடங்களில் அணிந்து குமரியில் காணிக்கை வசூலிக்கும் தசரா பக்தர்கள்: வெளி மாவட்டத்தினரும் வருகை

செஞ்சி சாலை பெரிய வாய்க்காலை தூர்வாரியபோது கிரேன் இயந்திரம் கவிழ்ந்து விபத்து; ஆபரேட்டர் படுகாயம்