நத்தம் பகுதியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பம் விநியோகம் மும்முரம்

நத்தம், ஜூலை 22: தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை அண்ணா பிறந்தநாளான வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதையொட்டி பயனாளிகளுக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடை குடிமைப் பொருட்கள் விற்பனையாளர்கள், ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று நேரடியாக விநியோகம் செய்து வருகின்றனர். நத்தத்தில் இப்பணி மும்முரமாக நடந்து வருகிறது.

வைகை 3 அங்காடி கடை விற்பனையாளர் அசாருதீன் முஸ்லிம் தெரு, முல்லைநகர் உள்ளிட்ட பகுதிகளில் விண்ணப்ப படிவம் உள்ளிட்ட டோக்கன்களை வழங்கி வருகிறார். இதுகுறித்து அவர் தெரிவித்த போது, டோக்கனில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை செலுத்த வேண்டிய மையம், நேரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 1189 குடும்ப அட்டைகள் உள்ளது. இதில் 812 டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவை வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் வழங்கப்பட்டு விடும் என்றார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை