நடிகை செரீனுக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: தமிழில் ‘துள்ளுவதோ இளமை’, ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, ‘விசில்’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’, ‘பீமா’, ‘நண்பேன்டா’ மற்றும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர், செரீன். ஏற்கனவே அவர் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்றாலும், தற்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘எனக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் லேசான பாதிப்பு மட்டுமே இருக்கிறது. விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன். கடந்த சில நாட்களில் என்னுடன் போட்டோ எடுத்துக்கொண்டவர்கள் மற்றும் ஏர்போர்ட்டில் சந்தித்தவர்கள், பேச்சு தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து பரிசோதனை மேற்கொண்டு, தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்