நடிகர் சூர்யாவை குறிவைத்து செயல்படும் பாஜ இளைஞர் பிரிவு: முத்தரசன் குற்றச்சாட்டு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசியல் அமைப்புச் சட்டத்தை சிறுமைப்படுத்தும் வகையில் புதிய சட்டங்களை தொடர்ந்து இயற்றி வரும் ஒன்றிய அரசு தற்போது திரைப்பட ஒளிப்பதிவு திருத்த மசோதா-2021ஐ கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் திரைப்படங்களில் தங்கள் விரும்பும் சார்பு கருத்துக்கள் மற்றும் காட்சிகளை மட்டுமே அனுமதிக்க வழிவகை செய்துள்ளது. மேலும் தணிக்கைத்துறையின் அனுமதி பெற்று பழைய திரைப்படங்களையும் தடை செய்வது, அதன் பல்வேறு காட்சிகளை வெட்டிச் சீர்குலைப்பது என்ற தீய நோக்கத்தை உள்ளடக்கியுள்ளது. மேல் முறையீட்டு உரிமை முற்றிலுமாக பறிக்கப்பட்டுள்ளது. இந்த கருப்புச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என குரல் எழுப்பி வருபவர்களை, குறிப்பாக கலைஞர் சூர்யாவை குறிவைத்து பாஜ இளைஞர் பிரிவும், அதன் ஆதரவு அமைப்புகளும் கலகத்தைத் தூண்டும் மலிவான செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஜனநாயக உரிமையைப் பறித்து சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளும் சீர்குலைவு செயல்களை அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து ஒடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

Related posts

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு: திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என பேட்டி

சென்னையில் இன்று திமுக முப்பெரும் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்: தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் குவிந்தனர்; பவளவிழாவை குறிக்கும் விதத்தில் 75,000 பேருக்கு இருக்கைகள்

ராணுவம், தேசத்திற்கு எதிரான பதிவுகளை அனுமதிக்க இயலாது அனைத்து சமூக வலைத்தளத்துக்கும் விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்