நடமாடும் கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸில் பணியாற்ற 84பேர் தேர்வு

நாமக்கல், ஜூலை 3: நாமக்கல்லில், நடமாடும் கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கான நேர்காணல் நேற்று நடந்தது. மாவட்ட மேலாளர் சின்னமனி நேர்காணலை நடத்தினார். இதில் நாமக்கல், திருச்சி, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 170க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். டிரைவர்களுக்கு, டிரைவிங் லைசென்ஸ், கல்விச் சான்று, உயரம் மற்றும் வாகனம் ஓட்டி பரிசோதித்தல் போன்றவை செய்யப்பட்டது. டிரைவர் தேர்வில் 18 பேரும், உதவியாளர்களுக்கான தேர்வில் 64பேர் என 82பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு சென்னையில் ஒரு வாரம் பயிற்சி அளிக்கப்பட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை