நஞ்சை, புஞ்சை நில உடைமை ஆவணங்களை முறைப்படுத்த, எடுக்கப்பட்ட முயற்சிகள் என்னென்ன ? : மக்களவையில் திரு. டி.ஆர். பாலு எம்.பி. கேள்வி

டெல்லி : திராவிட முன்னேற்றக் கழக பொருளாளரும், கழக நாடாளுமன்ற குழுத் தலைவருமான திரு. டி.ஆர்.அ பாலு அவர்கள், 9 பிப்ரவரி 2021 அன்று மக்களவையில், நஞ்சை மற்றும் புஞ்சை நில உடைமை ஆவணங்கள் முறைப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் என்னென்ன? என்று மாண்புமிகு மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் அவர்களிடம் கேள்வி எழுப்பினார். கிராமம் மற்றும் நகர்ப் புறங்களில் நங்சை மற்றும் புஞ்சை நில உடைமை ஆவணங்களை முறைப்படுத்தவும், பிழைகளை நீக்கவும், உடனடியாக மக்களுக்குக் கிடைக்க வகை செய்ய என்னென்ன முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன? என்றும், நில உடைமை ஆவணங்களை கணினி மயமாக்கும் திட்டங்கள் ஏதேனும் உள்ளதா? என்றும் விரிவாக கேள்வியை திரு. டி.ஆர். பாலு எழுப்பினார். மாண்புமிகு மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் மக்களவையில் அளித்த பதில் பின்வருமாறு:- இந்திய அரசு, 2008-2009 ஆண்டு முதலாகவே நில உடைமை ஆவணங்களை கணினி மயமாக்க, ஒருங்கிணைந்த நில அளவீட்டு மேலாண்மை முறையை கடைபிடித்து பிழைகளை நீக்கவும், நஞ்சை மற்றும் புஞ்சை உடைமை ஆவணங்கள் உடனடியாக மக்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் கிடைக்கும் வகையிலும், வருமானத் துறை அதிகாரிகள் இடையூறு இல்லாமல் உடனே கணக்குகளை பெறவும் அனைத்து மாநிலங்களும் உரிய முயற்சிகளை எடுத்து வருகின்றன என்றும்; நகர மற்றும் கிராம நில உடைமை ஆவணங்களை கணினி மூலம் கிடைக்கச் செய்ய, பல்வேறு மாநிலங்களின் வலைதளங்களின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும்;நிலம் மாநிலப் பட்டியலில் இருப்பதால், நில உடைமை ஆவணங்களை கணினி மயமாக்கவும், வருமானத் துறை அதிகாரிகளை பயிற்றுவிக்கவும், நவீன நில உடைமை தரவுகள் அறைகளை அமைக்கவும், தேவையான நிதி உதவியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அளித்து வருகின்றன என்றும்; காணொலிக் காட்சிகள் வாயிலாக அனைத்து மாநிலங்களுடன் மத்திய அரசு தொடர்பு கொண்டு நில உடைமை ஆவணங்களை கண்காணித்து வருவதாகவும், மாண்புமிகு மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் அவர்கள் மக்களவையில், திருப்பெரும்புதூர் மக்களவை உறுப்பினர் திரு. டி.ஆர். பாலு அவர்கள் எழுப்பிய கேள்விக்கு விரிவான பதிலளித்துள்ளார்….

Related posts

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

சூர‌ஜ் ரேவண்ணாவுக்கு 18ம் தேதி வரை காவல்

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் குறித்து ராகுல் குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்