நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: மக்கள் அச்சமின்றி வாக்களிக்க செல்லலாம்: மாநில தேர்தல் ஆணையர் பேட்டி

சென்னை: நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் நாளை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இது குறித்து தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார் பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது: * தமிழகத்தில் நாளை காலை 7 மணிக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது* தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடியே 83 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.* சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க சுமார் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்* மக்கள் அச்சமின்றி வாக்களிக்க செல்லலாம், விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.* வாக்கு இயந்திரம் வைக்கப்படும் இடங்கள், வாக்கு எண்ணிக்கை இடங்களில் சிசிடிவி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. * 268 வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. * நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னேறுப்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.* தமிழகம் முழுவதும் 5,960 பதற்றமான வாக்குச்சாவடிகள் வெப் ஸ்ட்ரீம் முறையில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது* சென்னையில் மூவர் உட்பட 38 மாவட்டங்களிலும் 41 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். * கோவை மாவட்டத்தில் மட்டும் 2,528 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்* கோவைக்கு சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர் நியமனம்* கொரோனா நோயாளிகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டள்ளது, சான்றிதழ் காட்டி வாக்களிக்கலாம்* பணப்பட்டுவாடா குறித்து குறிப்பிட்டு கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும்* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள வாக்குச்சாவடிகளில் 295 வாக்குச்சாவடிகளில் தேர்தல் தள்ளிவைப்பு* தற்போது வரை 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு பேட்டியளித்தார். …

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்