நகராட்சி அலுவலகத்தில் மருத்துவ முகாம்

 

தேவகோட்டை, ஜூலை 17: தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஷ்யாம்ஜேசுரன் தலைமையில் மருத்துவக் குழு மற்றும் மக்களை தேடி மருத்துவக் குழு இணைந்து மருத்துவ முகாமை நடத்தியது. நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் நகராட்சி அனைத்து அதிகாரிகளுக்கும் பரிசோதனை நடைபெற்றது. முகாமை நகர்மன்றத் தலைவர் சுந்தரலிங்கம், துணைத் தலைவர் ரமேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

முகாமில் தொழுநோய் பற்றி விழிப்புணர்வு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், எச்ஐவி, கண் பரிசோதனைகள் செய்தனர். மஞ்சள் காமாலை தடுப்பூசி போடப்பட்டு மாத்திரை, மருந்து வழங்கப்பட்டது. சுகாதாரத் துறை சார்பாக கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய விவேகா தொண்டு நிறுவன இயக்குனர் ஜெயராணியை பாராட்டி கௌரவித்து விருது வழங்கினர். இந்நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், மருத்துவக் குழு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை