தொழில் வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை

 

பழநி, செப். 11: தொழில் வரி செலுத்தாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பழநி நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மளிகைக்கடை, கறிக்கடை, டீக்கடை, உணவகங்கள் லாட்ஜ், திருமண மண்டபம் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில் அனைத்து தொழில் செய்யும் வணிக நிறுவனத்தார் நடப்பு 2023-24ம் ஆண்டிற்கான தொழில் உரிமத்தை புதுப்பித்து, தொழில் வரித்தொகையை நகராட்சி அலுவலகத்தில் உடளடியாக செலுத்தியிருக்க வேண்டும். தவறும்பட்சத்தில் செலுத்தக்கூடிய உரிமத்தொகையில் 50% அபராதத் தொகையாக செலுத்த நேரிடும். மேலும், நீதிமன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுமென நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை