தொழிலாளி தற்கொலை

ஈரோடு, ஜன. 12:ஈரோடு பெரியசேமூர், பசுமைநகரை சேர்ந்தவர் ரமேஷ் (44). கூலித்தொழிலாளியான இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் ரமேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் மனைவி மற்றும் குழந்தைகளை கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டனர். தனியாக வசித்து வந்த ரமேஷ் குடும்பத்தினர் தன்னை சேர்த்துக்கொள்ளவில்லை என்ற மனக்கவலையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வீட்டின் விட்டத்தில் நைலான் கயிற்றால் தூக்கிட்டு ரமேஷ் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஈரோடு வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்