தொழிலதிபரை கடத்தி சொத்துக்களை எழுதி வாங்கிய விவகாரம் தலைமறைவான உதவி கமிஷனரின் கூட்டாளி கைது

சென்னை: சென்னை அயப்பாக்கம் 5வது மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் ராஜேஷ்(37). தொழிலதிபர். இவர் சாய் சாப்டெக் நிறுவன உரிமையாளர் வெங்கடேசனுடன் கூட்டாக தொழில் தொடங்கினார். இதற்கிடையில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. அப்ேபாது ராஜேசுக்கு ரூ.5.5 கோடி வரை இழப்பு ஏற்பட்டது. இதனால் தன் நண்பர் ெவங்கடேசனிடம் 2 கோடி கடன் பெற்றார். இதற்காக தன் சில சொத்துக்களை எழுதி கொடுத்தார். இந்நிலையில், வெங்கடேசனை, ராஜேஷ் 20 கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டதாக மிரட்டி, அவரது சொத்துக்களை எழுதி வாங்கினார். இதுகுறித்து ராஜேஷ், போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், இதன் பின்னணியில் பெரிய கும்பல் இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து இந்த வழக்கு மாநகர காவல் துறையில் இருந்து அதிரடியாக சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.அதில் தொழிலதிபர் ராஜேசை அகில இந்திய இந்துமகா சபை தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ, உதவி கமிஷனர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன், தொழிலதிபர் வெங்கடேசன், ஆந்திரா கும்பல் ஒன்று கடத்தி ஒரு வாரம் பண்ணை வீட்டில் அடைத்து வைத்து சொத்துக்களை எழுதி வாங்கியது உறுதியானது. பிறகு உதவி கமிஷனர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்ஐ பாண்டியராஜன், கோடம்பாக்கம் ஸ்ரீ உட்பட 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் தொழிலதிபரை கடத்திய வழக்கில் அகில இந்து மகா சபை தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கடந்த ஜூலை 13ம் தேதி கைது செய்தனர்.இந்த வழக்கில் உதவி கமிஷனர் சிவக்குமார் உள்பட 9 பேர் தலைமறைவாக உள்ளனர்.இந்நிலையில், ரகசிய தகவலின்படி, ஐதராபாத்தில் முகாமிட்டு, கடத்தல் வழக்கில் உதவிய, உதவி கமிஷனரின் கூட்டாளி விநாயகம் என்பவரை 13ம் தேதி சிபிசிஐடி தனிப்படையினர் கைது செய்தனர். அவரிடம் தலைமறைவாக உள்ள உதவி கமிஷனர் உட்பட மேலும் 8 பேர் பதுங்கி உள்ள இடம் குறித்து விசாரித்து வருகின்றனர். …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்