தொண்டி பகுதியில் ரவுண்டானா அமைக்கப்படுமா?

 

தொண்டி, ஜன. 20: ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி வளர்ந்துவரும் நகர் பகுதியாகும். வளர்ச்சிக்கு ஏற்றார் போல் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. தொண்டி பழைய பஸ் ஸ்டாண்ட் செக்போஸ்ட் பகுதி மற்றும் வட்டாணம் ரோடு ஆகிய மும்முனை சந்திப்பு உள்ள இடங்கள் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். மும்முனை சந்திப்பு என்பதால் எதிரே வரும் வாகனம் தெரியாமல் அடிக்கடி விபத்து நடக்கிறது. மேலும் இரவு நேரங்களில் இப்பகுதிகள் இருளாக இருப்பதாலும், மாடுகள், நாய்கள் படுத்துக் கொள்வதாலும் விபத்து நடக்கிறது. அதனால் இப்பகுதிகளில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமுமுக பரக்கத் அலி கூறியது, தொண்டி – மதுரை – ராமேஸ்வரம் மும்முனை சந்திப்பான பழைய பஸ் ஸ்டாண்ட் செக்போஸ்ட் பகுதியும், வட்டாணம் ரோடு – பட்டுக்கோட்டை – கடற்கரை சாலை சந்திப்பான வட்டாணம் ரோடு பகுதியும் எப்போதும் போக்குவரத்து அதிகரித்து காணப்படும். இங்கு எதிரே வரும் வாகனம் தெரியாமல் மோதி அடிக்கடி விபத்து நடக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு செக்போஸ்ட் பகுதியில் ரவுண்டா அமைக்க பேருராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடதக்கது. ஆனால் எவ்வித முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை. எனவேஅதிகாரிகள் இப்பகுதியில் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்