தொண்டியில் விழிப்புணர்வு பேரணி

 

தொண்டி, ஜூன் 22: தொண்டியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி மற்றும் மாணவர் சேர்க்கை பள்ளி தலைமையாசிரியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜெயந்தன் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ரம்யா அனைவரையும் வரவேற்றார்.

பள்ளி மாணவ மாணவிகள் அரசு பள்ளி சேர்க்கை கல்வியின் முக்கியத்துவம் குறித்த பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். மேலும் மழலையர் பள்ளி துவக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பேரிச்சை பழம், பென்சில் கொடுத்து பள்ளி ஆசிரியைகள் சுப, புஷ்பா, அம்சத் ராணி மற்றும் இல்லம் தேடிக் கல்வி ஆசிரியைகள் வரவேற்றனர். நிறைவாக பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ரம்யா நன்றி கூறினார்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’