தொண்டியில் விளையாட்டு அரங்கம் அமைய உள்ள இடத்தை, கலெக்டர் ஆய்வு

தொண்டி: தொண்டியில் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என தினகரனில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அதற்கான இடத்தை நேரில் ஆய்வு செய்தார். தொண்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் கபாடி, கிரிக்கெட், ஒட்டப்பந்தயம் என ஏராளமான விளையாட்டு வீரர்கள் உள்ளனர். ஆனால், இந்த வீரர்கள் மற்றும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக எவ்வித விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய விளையாட்டு அரங்கம் சுற்று வட்டாரத்தில் எங்கும் இல்லை. இதுகுறித்த விரிவான செய்தி கடந்த இரு தினங்களுக்கு முன்பு தினகரன் நாளிதழிலில் விரிவாக வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று தொண்டி செய்யது முகம்மது அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பல ஏக்கர் நிலப்பரப்பை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து போதிய இட வசதி உள்ளதால் இங்கு விளையாட்டு அரங்கம் அமைக்கலாம் என உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் உத்தரவிட்டார். அப்போது, திருவாடானை தாசில்தார்  செந்தில் வேல்முருகன், பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ், விஏஓ நம்பு ராஜேஷ், அலிகான், சாதிக் பாட்சா உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்….

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்