தொடர்ந்து தங்கம் விலை சரிவு கடந்த 3 நாளில் சவரன் 1,000 குறைந்தது

சென்னை:  தங்கம் விலை கடந்த 2 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. சில நேரங்களில் அதிரடியாக உயர்ந்தும், குறைந்தும் வந்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக தங்கம் விலை குறைந்து வருகிறது. கடந்த 15ம் தேதி ஒரு சவரன் 36,680க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு 16ம் தேதி சவரன் 64 குறைந்து சவரன் 36,616க்கு விற்கப்பட்டது, 17ம் தேதி (நேற்று முன்தினம்) கிராமுக்கு 77 குறைந்து ஒரு கிராம் 4500க்கும், சவரனுக்கு 616 குறைந்து ஒரு சவரன் 36,000க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் 3வது நாளாக நேற்றும் தங்கம் விலை சரிவை சந்தித்தது. அதாவது கிராமுக்கு 40 குறைந்து ஒரு கிராம் 4,460க்கும், சவரனுக்கு 320 குறைந்து ஒரு சவரன் 35,680க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு 1000 குறைந்துள்ளது. அதே நேரத்தில் நீண்ட மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை சவரன் 36,000க்கு கீழ் இறங்கியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது….

Related posts

ஆகஸ்ட் 02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை 7.50 அதிகரிப்பு

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 82,100 புள்ளிகளைக் கடந்து சாதனை..!!