தேவி கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

உசிலம்பட்டி. ஜூலை 13: உசிலம்பட்டி கவுன்டண்பட்டி சாலையில் உள்ள தேவிகருமாரியம்மன் கோயில் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், கோமாதா பூஜை, முதல் கால யாகசாலை பூஜைகள், வாஸ்து சாந்தி, மூல மந்திர ஜெயம் உள்ளிட்டவை தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார் ராம்குமார் தலைமையிலான அர்ச்சகர்கள் கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோயில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து